ஒநாயின் நன்றிஅடர்ந்த காட்டில் ஒநாய் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு நல்ல இரை கிடைத்தது. இரைக் கிடைத்த சந்தோசத்தில் வேக வேகமாக தின்றது.

அதில் ஒரு எலும்புத்துண்டு ஒநாயின் தொண்டைக் குழியில் சிக்கியது.

அதனால் வலிப் பொறுக்க முடியாமல் ஊளையிட்டு அங்கும் இங்கும் ஓடியது.

அப்பொழுது ஒரு கொக்கு அதன் எதிரே வந்தது.

அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்புத்துண்டை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும், பொருளையும் தருவதாக ஆசைவார்த்தைக் கூறியது.

உதவும்படி மிகவும் கெஞ்சியது. கடைசியில் ஒநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது.

கொக்கு தன் நீண்ட அலகால் ஒநாயின் வாய்க்குள் சிக்கி இருந்த எலும்பை எடுத்தது.

தன் பிரச்சனை முடிந்தவுடன் ஒநாய், கொக்கைப் பார்த்து ஏனைமாகச் சிரித்தது. மேலும் எனக்கு மீண்டும் பசியாக உள்ளது என்ன பண்ணாலாம் என்று பயமுறுத்தும் வீதமாக கூறியது.

இதைப் புரிந்துக் கொண்ட கொக்கு,  நன்றியில்லாத ஒநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக் கொண்டே தன் வழியே சென்றது.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்