ஆடு மேய்ப்பவனின் பாசம்




ஒரு ஊர்ல ஒர் ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் நிறைய ஆடுகளை தன் பண்ணையில் வளர்த்து வந்தான். அந்த பண்னையில் ஒரு நாயையும் வளர்த்து வந்தான். அந்த நாய் நல்ல முறையில் பண்ணையை பாதுகாத்து வந்தன.

இருந்தாலும், ஆடுக்களுக்கு அந்த ஆடு மேய்ப்பவர் நேரத்துக்கு உணவு அளிப்பதும், தண்ணி கொடுப்பதும், வாரந்தோறும் மருத்துவரைக் கொண்டு வந்து பார்ப்பதும், என சிறந்த முறையில் கவனித்துவந்தான்.

ஆனால், நாய்க்கு அப்படியில்லை இரவு முழுவதும் ஆடுகளை  மற்ற விலங்கிடம் பாதுக்காக்க அதை தூங்கமால் வேலை வாங்குவதும், சரியான நேரத்தில் உணவு கொடுப்பதுயில்லை.

நாய், இதைப் பார்த்து மிகவும் கவலையும், வருத்தமும் அடைந்தது. இப்படியே, நாட்கள் சென்றன ஆடுகளும் நல்ல வளர்ந்து  கொழு  கொழுனு வளர்ந்தன.

ஒரு நாள் ஆடு மேய்ப்பவரிடம், கசாப்பு கடைக்கார் வந்தார். ஆடுகள் நல்ல  கொழுனு வளர்ந்து இருப்பதை அதைப் பார்த்து அதை நல்ல விலைக் கொடுத்து வாங்கிச் சொன்றார்.

அதைப் பார்த்த நாய், அடா! இந்த ஆட்டை இவ்வளவு பாதுகாத்து நல்ல முறையில் வளர்க்குறது பாசத்தாலனு நினைச்சோம். ஆனால்,  அதை  கசாப்புக்கார்க்கு விற்றக்கத்தான.

நமக்கு இந்த சுகந்திரமான வாழ்வே மேல் என்று வழக்கம்ப் போல் தன் வேலையைப் பார்த்தது.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்