முட்டாள் விவசாயிஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். தன்னிடம் ஒர் ஆட்டை தன் பணத் தேவைக்காக சந்தைக்கு விற்க புறப்பட்டான்.

அவன் ஆட்டுடன் வருவதை வழியில் மூன்று திருடர்கள் கண்டார்கள். அந்த ஆட்டை அவனிடமிருந்து பறிப்பதற்கு அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். வழியில் போய்க்கொண்டிருக்கும் விவசாயிடம் முதலில் ஒருவன் வந்தான்.

நண்பரே, இந்நேரத்தில் நாயை என்ன இப்படி இழுத்துக் கொண்டு போறிங்க? உங்கள கடித்துவிடப் போய்கிறது என்று கேட்டான்.
சந்தையில் விற்பதற்காக நான் கொண்டு செல்லும் ஆட்டைப் பார்த்து, நாய் என்கிறாயே!. நீ என்ன குருட்டுை பையல? என்று பதில் அளித்து விட்டு, அந்த ஆட்டை தோளில் தூக்கிக்கொண்டு விவசாயி நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது திருடன் விவசாயி எதிரில் வந்து, பெரியவரே, செத்துப்போன கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறீர்களே. இதைக் கேட்டு கோபமான விவசாயி.

நீ  என்ன பைத்தியமா ஆட்டைப் பார்த்துக் கன்றுக்குட்டி என்கிறாயே, என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் மூன்றாவது திருடன் குறுக்கில் வந்தான். இது என்ன ஆச்சிரியம்!  கழுதையை சுமந்துக்கொண்டு வருகிறாய். நீ பெரிய பலசாலித் தான் என்றான்.

இதைக்கேட்டவுடன் விவசாயி மனத்தில் குழப்பம் அதிகம் ஆனது. நான்ஆட்டைத் தூக்கிக்கொண்டு வருகிறேன். ஆனால், வழியில் பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியாகப் போகிறார்கள்.

அப்படியானால், ஒவ்வொரு முறையும் அந்த ஆடு வெவ்வேறு விதமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். இந்த இடம் சாதாராண இடமில்லை ஏதோ சூனியம் நிறைந்த இடமாக இருக்குமோ? இனி இந்த ஆட்டுடன் சென்றால் நமக்கு கேடுதான் என்று எண்ணி அதைக்கீழே இறக்கிவிட்டு திரும்ப தான் வீட்டுக்கு சென்றுவிட்டான்.

பிறகு, அந்த திருடர்கள் ஆட்டைப் பிடித்து சென்று விட்டார்கள்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்