ராஜ்ஜியத்தின் காகங்கள்

ஒரு நாள் அக்பரும், பீர்பாலும் அரசத் தோட்டத்தில் உலா சென்று கொண்டிருந்தபோது அக்பர் மரத்தின் மீது காகங்களின் கூட்டத்தைக் கண்டார்.

ராஜ்யத்தில் எத்தனை காகங்கள் இருக்கும், பீர்பால்? என மன்னார் கேட்டார்.

"உங்களுடைய ராஜ்ஜியத்தில் தொண்ணூற்று  ஐந்தாயித்து நானூற்று அறுபத்து மூன்று காகங்கள் உள்ளன. அரசே".

அக்பர் பீர்பாலை ஆச்சிரியத்துடன் பார்த்தார். " அது உனக்கு எப்படி தெரியும்?"

" உங்கள் மாட்சிமை ( Majesty) எனக்கு மிகவும் உறுதியாக உள்ளது. நீங்கள் காகங்களை எண்ணிப்பார்க்கலாம்" என்று பீர்பால் நம்பிக்கையுடன் கூறினார்.

குறைந்த காகங்கள் இருந்தால் என
என்ன செய்வது? என்று அக்பர் சந்தேகத்துடன் கேட்கிறார்.

மாமன்னா, காகங்கள் அண்டை நாடுகளிலுள்ள தங்கள் உறவினர்களைச் சந்திக்கச் சென்றுள்ளன என்று அர்த்தம்.

அது சரி, ஆனால் பீர்பால் நீங்கள் சொன்னத விட காகங்கள் அதிகமாக இருந்தால் என்ன செய்வது?

இதில் என்ன சந்தேகம் மாமன்னா, "மற்ற தேசங்களிலிருந்து காகங்கள் நம் தேசத்தில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க வந்துள்ளன".

இதைக் கேட்ட அக்பர் புன்கைத்தார்.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்