நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

ஒரு தாயின் சொல்

ஒர் இளைஞன் தன் சொந்தே வே வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்தது. புறப்படும் முன் தாயிடம் விடைப்பெற்றுக் கொள்ள வீட்டுக்கு வந்தான். வெளியூர் போவதென்றால் ஒரு துணையோடு போ என்று தாய் கூறினாள். எனக்குத் துணைவரக் கூடியவர்கள் யாரும் இல்லையே என்ன அந்த இளைஞன் கூறினான்.

அதைக் கேட்ட தாய், ஒரு நண்டைப் பிடித்து ஒரு கலயத்துக்குள் போட்டு இதைத் துணைக்கு கொண்டு போ என்று சொல்லிக் கொடுத்தாள்.


அவனும் அதை வாங்கிட்டு போனான். போகும் வழியில் அவன் களைத்துப் போனதால் இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் தங்கினான்.

நண்டிருந்த கலயத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு அவன் தூங்கினான். அப்போது அந்தப் பக்கமாக ஒரு நல்ல பாம்பு வந்தது.  அது அவனைத் தீண்டுவதற்காக நெருங்கியது.

அப்போது ஊர்ந்து ஊர்ந்து கலயத்துக்கு  வெளியே வந்த நண்டு. நல்லபாம்பை கண்டு விட்டது. அது பாம்பை நெருங்கி வந்து தன் கால் கொடுக்கால் நெறித்து அந்த பாம்பைக்கொன்று விட்டது.

நெடுநேரம் சென்று தூங்கி எழுந்த இளைஞன் செத்துக் கிடந்த பாம்பைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். அதைக்கொன்றது யார் என்று ஆராய்ந்த போது தான் கொண்டுவந்த நண்டுதான் என்று தெரிந்துக் கொண்டான்.

'தாய் சொல்லைத் தட்டாமல் என் தலைமேற் கொண்டு நடந்தால் அல்லவா நான் உயிர் பிழைத்தேன்' என்று தன் அன்பு குரிய தாயை நன்றியோடு நினைத்துக் கொண்டான்.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்