குரங்கும், முதலையும்



ஊருக்கு அப்பால் ஒரு குளம் இருந்தது, அதில் முதலைகள் வாழ்ந்து வந்தன. அதன் கரையோரம் ஒரு நாவல் பழம் மரம் இருந்தது. அந்த மரத்திற்கு அடிக்கடி ஒரு குரங்கு வந்து பழங்களை சாப்பிட்டு செல்லும். ஒருநாள் மரத்தில் குரங்கு பழங்களை பறித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தது.

அதை குளித்தில் உள்ள ஒரு முதலை, குரங்கை பார்த்து என்ன சாப்பிடற என்று கேட்டு, அதற்கு குரங்கு இது நாவல் பழம் சாப்பிட சுவையாய் இருக்கும் என்று கூறியது. பிறகு, அந்த குரங்கு நீயும் சாப்பிட்டு பார் ரெம்ப சுவையாக இருக்கும என்றது. முதலை தன் நீண்ட வாயை திறந்தது.

குரங்கு நாவல் பழங்களை பறத்து அதன் வாயில் போட்டது அதை தின்ற முதலை ரெம்ப சுவையாகயிருந்தது என்றது. முதலை, குரங்கிடம் எனக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்குமா? இந்த சுவையான பழங்களை என் மனைவிக்கு கொடுக்க என்றது. அதற்கு குரங்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த என்று ஒரு இலையை கூடைப் போல் பின்னி அதில் பழங்களை நிரப்பி கொடுத்தது.


அந்த பழங்களை முதலை தன் மனைவியிடம் கொடுத்தது. அதன் மனைவி அதை சாப்பிட்டு ரெம்ப சுவையாகயிருக்கிறது என்றது.

சிறிது நேரம் கழித்து முதலையின் மனைவி இதை யார் கொடுத்தது? என்று கேட்டது. அதற்கு முதலை நம் குளம் அருகில் ஒரு நாவல்மரம் இருக்கிறது. அங்கே ஒரு குரங்கு வரும் அதில் உள்ள பழத்தை சாப்பிடும். அதைப் பார்த்த நான் குரங்கிடம் கேட்டேன் அது கொடுத்தது என்றது.
 இந்த சுவையான பழம் தான் இந்த குரங்கிற்கு உணவு அப்படி தான ஆம் என்றது முதலை, அப்ப இவ்வளவு சுவையாகயிருக்கும் இந்த பழத்தை தான் குரங்கு சாப்பிடுகிறது.

இந்த பழம் இவ்வளவு சுவை என்றால் அந்த பழத்தை சாப்பிடும் குரங்கின் இதயம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்றது. இதைக்கேட்ட முதலை மிக அருமையாக இருக்கும், ஆனால் அதை எப்படி சாப்பிடுவது என்று கேட்டது.

 அதற்கு மனைவி முதலை அதை நாம் நாம் வீட்டுக்கு விருந்திற்கு வர சொல்லுங்க மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியது.

மறுநாள், முதலை குரங்கிடம் என் மனைவி உனக்கு விருந்து கொடுக்க விருப்பிக்கிறாள். ஆகவே, நீங்கள் என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைத்தது. குரங்கு அதை நம்பி ஒப்புக்கொண்டது.

ஆனால், எப்படி உங்கள் வீட்டிற்கு வர முடியும் என்றது. அதுக்கு என்ன நீங்கள் என் முதுகில் ஏறிகொள்களுங்கள் நான் உங்களை அழைத்துச்செல்கிறேன் என்றது முதலை.

குரங்கும் சம்மதம் சொல்லி முதலையின் முதுகில் ஏறியது. நீரின் நடுப்பகுதிக்கு வந்தவுடன் முதலை அட முட்டாள் குரங்கே நான் உனக்கா விருந்து கொடுக்கப் போகிறோம். உன்னைதான் எங்களுக்கு விருந்து ஆக்கப்போகிறோம் என்று முதலை தன் திட்டத்தை கூறியது.

இதைக்கேட்ட குரங்கு சிறிது 
அதிர்ச்சியானது.
பிறகு தன் பயத்தை வெளியே காட்டாமால் என் நண்பா இதை முதலிலே சொல்லவேண்டியது தனா என் இதயத்தை இப்பதான் கழற்றி மரத்தில் காயவைத்தேன் என்று கூறியது. அதைக்கேட்ட முதலை உண்மை என நம்பி திரும்ப மரத்தருகில் சென்றது, உடனே சற்றும் தாமதப்படுத்தாமல் மரத்தில் மீது தாவி உயர சென்றது. பிறகு குரங்குக் கூறியது அடே முட்டாள் முதலையே யாரவது இதயத்தை கழற்றி வைப்பார்களா.

உனக்கு உதவி செய்த எனக்கு  உதவில்லை என்றாலும் பரவில்லை ஆனா என்னை கொல்லும் அளவுக்கு சென்று விட்டாய் என்று குரங்குக் கூறியது. அது தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள்.

 எனக்கு ஒரு நல்ல படிப்பினை கற்றுக்கொடுத்தாய் என்று அங்கிருந்து குரங்கு சென்றது. முதலையும் ஏமார்ந்து போனது.







Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்