இரு பாறைகள்


ஒரு காட்டுல இருபாறைகள் இருந்தன அவைகள் இரண்டும் நல்ல நண்பர்கள்.
 அதில் ஒரு பாறை நாம் எவ்வளவு நாள் இந்த மழை, வெயில், வெப்ப காற்று, மேலும் பல இன்னல்களை சகிக்கிறது. இதற்கு, ஒரு தீர்வு கிடையாத இறைவா என்று இறைவனை வேண்டியது.

அதற்கு மற்றொரு பாறை ஆமாம் இங்கிருந்து ரெம்ப போர்(bore) அடிக்குது. இதில, பறவைகள் தொல்லை வேறு நாம் மேல வந்து உட்கார்நது அசிங்கம் பண்ணுறது இதுக்கு ஒரு தீர்வு கொடுற இறைவனிடம் நக்கலாக வேண்டியது.

இப்படியே காலம் சென்றது. ஒருநாள் பக்கத்து கிராமத்துலிருந்து ஆட்கள் வந்து இந்த இரண்டு பாறையை பார்த்து இதுல எது அதற்கு சரிப்பட்டு வரும் என வடிவேலு காமடி தோணியில் பேசுனாக, அதுல ஒருத்தர் இரண்டுமே சரிப்பட்டு வரும்னு சொன்னார்.

சரி வாங்க நாளைக்கு வந்து இந்த இரண்டு பாறையையும் எடுத்துச் செல்வோம். அவர்கள் சென்ற உடனே இரண்டு பாறைகளும் பேசிக் கொண்டான.

என்ன இவர்கள் பேசியது எதுவும் புரியல, எப்ப நாளைக்கு அவர்கள் வரும்போது நான் மண்ணுக்குள் புதைந்துக் கொள்வேன் என்றது அந்த நக்கல் பாறை.

 அதற்கு பொறுமை பாறை இல்ல அவர்கள் எதோ ஒரு நல்ல விசயத்திற்கு தான் நம்மைள எடுத்து செல்லிக்கிறார்கள் என்றது.

எப்படியோ,  நான் இந்த காட்ட விட்டு 
சென்றால் நல்லது. இப்படியும் இவர்கள் நம்மளை எடுத்துச்சென்று விடுவார்கள்.

அதைப்போல் மறுநாள் காலை அவர்கள் வண்டியுடன் வந்தார்கள். அந்த பொறுமை பாறையை  மிக சுலபமாக எடுத்து வண்டியில் வைத்தார்கள்.

ஆனால், நக்கல் பாறையை தூக்கும் போது அதை அசைக்கக் கூட முடியாவில்லை பலவாறு முயற்சிச் செய்து பார்த்தனார். ஒன்னும் நடக்கல அதனால் அதை அப்படியே விட்டு ஒரு பாறையை மட்டும் எடுத்து சென்று விட்டார்கள்.

அந்த பொறுமை பாறையை ஒரு சிற்பிடம் கொடுத்து இதை நாம் கோயிலுக்கு சாமி சிலை செய்து தருமாறு கேட்டனர். இதை கேட்ட அந்த பாறைக்கு மிகவும் மகிழ்ச்சியானது நாம் பொறுமைக்கு பலன் கிடைத்தது.

பிறகு அதை ஒரு அழகான சாமி சிலையாக உருவானது. அவர்கள் அந்த சிலையை பார்த்து இதுவே நாம் கட்டும் புது கோயிலுக்கு சாமி சிலையாக  வைத்தனர்.

ஆனால், நக்கல் பேசி எதற்கும் வளைந்து கொடுக்காத அந்த நக்கல் பாறை அந்த காட்டிலிருந்து பறவைகளின்  செய்யும் அசிங்களை தாங்கிக் கொண்டு மற்றும் பல இன்னல்களை, இடர்களையும் தாங்கிக் கொண்டு அந்தக் காட்டிலே இருந்தது.

 யார் ஒருவர் பொறுமை, சகிப்புதன்மை, வளைந்துக் கொடுக்கும் தன்மையுடன் இருக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.ஆனால், இதற்கு மாறாக இருப்பவர்கள் கடைசி வரை பல இன்னல்களை, இடர்களையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்