தொடர் முயற்சி




குல்லா வியாபாரி ஒருவர், குல்லாவை விற்பதற்காக தன் வீடிலிருந்து சந்தைக்கு போய்க்கொண்டு இருந்தார். சந்தை வெகு தூரம் இருந்ததால் போகும் வழியில் சிறிது ஓய்வு எடுக்க விருப்பினார்.

அதனால் ஒரு மரடியில் தான் கொண்டு வந்த குல்லாவை வைத்துவிட்டு ஓய்வு எடுத்தார். அப்படியே நடந்த களைப்பினால் தன்னை அறியாமல் தூங்கி விட்டார்.

வெகு நேரத்திற்கு பிறகு திடீரென்று விழித்த குல்லா வியாபாரி தன்னிடம் இருந்த கூடையில் வைத்து இருந்த குல்லாவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மரத்திலிருந்த குரங்குகள் குல்லாவை வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எப்படி வாங்குவது என்பதை யோசித்தவரு தலையில் இருந்த குல்லாவை எடுத்து தலையை சொரிய குரங்குகளும் அதைப்போல் செய்தன. இதை அறிந்த குல்லா வியாபாரி, திரும்ப தன் தலையிருந்த குல்லாவை  கீழே போட்டார்.

 அதைப்போல் எல்லா குரங்கும் குல்லாவை கீழே போட்டன. நேரம்  தாழ்த்தாமால் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை காலிச்செய்தார்.

நீதி: "இக்காட்டான சூழ்நிலையில் நம்பிக்கை இழக்கமால் தொடர் முயற்சி நல்லது".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்