நன்பர்களே, இன்று நாம் ஒரு முயலின் புத்திசாலித்தனதால் அழிவிலிருந்து மற்ற விலங்குகளை காப்பாற்றிய கதையை தான் பார்க்கபோகிறோம்.
அது ஒரு காடு, அந்த காட்டுல ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. அதுதான் அந்த காட்டுக்கு ராஜா, பொதுவா விலங்குகள் தங்கள் பசியின் போது மட்டும் வேட்டையாடும். ஆனால், இந்த ராஜா சிங்கம் பொழுதுபோக்குக்காக வேட்டையாடும் அதனால் தன் கண்ணில்ப்பட்ட மிருகங்களை எல்லாம் அடித்து கொன்றது.
இதனால் எல்லா மிருகங்களும் தனக்கு எப்ப என்ன நெருமோ என்ற பயத்துடன் வாழ்ந்து வந்தன. இதைப்பற்றி சிங்கத்திடம் கேக்கவும் முடியாது. அதை எதிர்த்துப்போராடவும் முடியாது.
ஆகையால், காட்டின் மந்திரியான நரியிடம் யோசனை கேக்க முடிவுச்செய்தான. அதன்படி எல்லா மிருகங்களும் நரியை சென்று பார்த்தன.
நரியும் நம்மால் அதை எதிர்த்து ஒன்னும் பண்ணமுடியாது ஆகவே, நாம் உயிர் எப்ப போகும் என்று பயந்து வாழ்வதை விட நாமே ஒவ்வொரு நாளும் சிங்கத்தின் குகைக்கு தினமும் ஒருவராக இரையாக போனால் மற்ற மிருகங்கள் சிறிது காலம் பயமின்றி வாழலாம் என்றது.
இதற்கு எல்லா மிருகங்களும் வேறு வழியின்றி ஒப்புதல் அளித்தது.
மறுநாள் நரி சிங்கத்தை சந்தித்து அணைத்து மிருகங்களின் விருப்பத்தை கூறியது. இதை கேட்ட சிங்கம் ராஜாவுக்கு ரெம்ப மகிழ்ச்சியானது.
மேலும், நரியிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வேண்டும்.
ஒருநாள் தவறினால் கூட உங்கள் அனைவரையும் வேட்டையடிவிடுவேன் என்று கர்ஜனை செய்தது.
அன்றுமுதல், தினமும் சிங்கத்திற்கு இரையாக ஒவ்வொரு மிருகம் சென்றது.
இப்படியே காலங்கள் சென்றன. ஒரு நாள் முயலின் முறை வந்தது. ஆனால், முயல் வர நேரம் தாமதம் ஆனதால் சிங்கம் கடும் கோபத்துடன் கர்ஜனை செய்தது. அந்த கர்ஜனை மற்ற மிருகங்ககளை மிகவும் அச்சத்தை வரவழைத்து.
ஆனால், முயல் நடுக்கத்துடன் சிங்கம் ராஜவே நான் வேணுமென்று தாமதமாக வரவில்லை. நான் வரும் வழியில் அச்சு அசலா உங்களைப்போல் ஒரு சிங்கத்தை பார்த்தேன். அது என்னை கொன்றுவிடுமோ பயந்து, அதற்கு தெரியாமல் வருவதற்கு தாமதமானது என்று முயல் கூறியது.
இதை கேட்ட சிங்கம் என்ன என் காட்டில் எனக்கு தெரியாமல் ஒரு சிங்கம் இருக்கிறதா வா போய் பார்ப்போம் என்றது.
சிங்கத்தை அழைத்துக்கொண்டு ஒரு கிணறை காண்பித்தது. எதற்குள் தான் அந்த சிங்கம் தாங்கி இருக்கிறது என்று முயல் கூறியது.
சற்றும் யோசிக்காத சிங்கம் கிணறை ஏட்டிப்பார்த்தது. சிங்கத்தின் பிம்பம் தண்ணிரில் தெரிந்தது. அதை பார்த்து சிங்கம் கர்ஜனை செய்தது.
அந்த பிம்பம் திரும்ப எதிரொலித்தது அதை பார்த்த சிங்கம் உனக்கு என்ன தைரியம் இருந்தால் திரும்ப என்னை பார்த்து கர்ஜனை செய்வாய் என்று கோபத்துடன் கிணற்றில் குதித்தது. கிணற்றிலிருந்து மேலே வர முடியாமல் தண்ணிரில் மூழ்கி இறந்தது.
சிங்கம் இறந்ததை பார்த்த முயல் மகிழ்ச்சியில் மற்ற மிருகங்களிடம் நடந்தை கூறியது. இதை கேட்ட மற்ற மிருகங்கள் மகிழ்ச்சியில் முயலின் செய்யலை பாராட்டியது.