கொக்கின் பசி



ஒரு காட்டுல ஒரு பெரிய ஓடை இருந்தது. அதுல நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு பெரிய கொக்கு பசியுடன் பறந்து அந்த ஓடைக்கு வந்தது. அங்க நிறைய மீன்கள் இருப்பதை பார்த்து சந்தோசமானது.

இங்க நம்ம பசிக்கு நல்ல இரை கிடைக்கும் என எண்ணியது. அதைப்போல் ஒரு பெரிய மீன் அதன் காலுக்கு அருகில் வந்தது அதை பார்த்து இங்க தான் நிறைய மீன்கள் இருக்கே சிறுது நேரம் வெயிட் பண்ணுன இதை விட பெரிய மீன் கிடைக்கும்.

என வெயிட் பண்ணியது சிறிது நேரத்தில் இன்னொரு பெரிய மீன் அதன் கால் அருகில் வந்தது. அதையும் பிடிக்காம இதை விட பெரிய மீனுக்காக வெயிட் பண்ணியது.
இப்படியே மாலை வரை காத்துகிட்டு இருந்துச்சு. ஆனால் சூரியன் மறையும் நேரம் வந்ததும். எல்லா மீனும் நீருக்கு அடியில் சென்றன.

கடைசியில் பசியுடன் இருந்த கொக்கு அங்க இருந்த நத்தையை சாப்பிட்டு தன் பசியை போக்கிருச்சு.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்