கழுதையும் அதன் நிழலும்





அது ஒரு வெயில் காலம் ரெம்ப கடுமையா இருந்தது. அப்ப ஒரு ஆள் கழுதையை வைத்து மேய்ச்சுக்கிட்டு இருந்தார்.

அந்த வழிய வந்த ஒருத்தர் ரெம்ப வெயில்க இருப்பதால் அவரால் நடக்க முடியல அவர் நெடு தூரம் போகவேண்டியிருந்தது அதனால் கழுதை மேய்ப்பரை பார்த்து ஐயா நான் நெடு தூரம் போகணும் உங்க கழுதை வாடகைக்கு வருமா என கேட்டார்.

அதை கேட்ட மேய்ப்பவர், கண்டிப்பா வரும் என்றார்.

பின்பு அந்த நபரை கழுதைமேல ஏத்திகிட்டு கழுதையின் சொந்தக்காரர் கூடவே சென்றார்.

வெகு தூரம் சென்றனர். வெயிலின் வெப்பம் காட்டுமையாக இருந்தது ஆதலால் அந்த வழிப்போக்கர் சிறிது ஓய்வு எடுக்க விருப்பினார்.

 ஆனா அங்கு ஒரு மரம் கூட இல்லை ஆகவே கழுதையின் நிழல்ல ஓய்வு எடுத்தாரு.
இதை பார்த்த கழுதையின் சொந்தக்காரர்  பயணம் போக மட்டும் தான் கழுதை வாடகைக்கு அதன் நிழல்லில் ஓய்வு எடுக்க இல்லை என்றார்.

இதனால் இருவர்க்கும் வாக்குவாதம் ஆகி அது பெரிய சண்டையானது. அந்த நேரத்தில் கழுதை ஓட்டம் பிடித்தது, சண்டைப்போட்ட  இரண்டுப் பேர்க்கும் கழுதையும் கிடைக்கல அதோட நிழலும் கிடைக்கல.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்