எறும்பும், புறாவும் (Ant and pigeon)ஒரு காட்டுல பெரிய மரம் இருந்தது. அதில் புறா கூடக்கட்டி வாழ்ந்து வந்தது. அந்த மரத்துக்கு அடியில் ஒரு எறும்பும் இருந்தது. அவர்கள் இருவரும் நண்பர்கள்.

ஒரு நாள் எறும்பு  தண்ணீர் குடிப்பதற்கு மரத்துக்கு பக்கத்தில் உள்ள ஆற்றிக்கு சென்றது. அப்பொழுது தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்தது.

இதனால், அதில் சிக்கிய எறும்பு தண்ணீர் இழுத்து சென்றது. அதிலிருந்து மீள முடியாமல் தவிர்த்து.
அப்ப மரத்தில் மேலிருந்த புறா அதை பார்த்து மரதிலிருந்து ஒரு இலையை கொத்தி, நீரில் போட்டது. எறும்பு இலை மீது ஏறி உயிர் பிழைத்தது.

காலங்கள் கழிந்தன, புறா தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து கொண்டு இருந்தது.

அந்த சமயம் ஒரு வேடன் வில் எடுத்து அந்த புறாவை குறிப்பார்த்து கொண்டிருந்தான்.

அதை  புறாவும் கவனிக்கவில்லை, அப்பொழுது எறும்பு அதை பார்த்து அந்த வேடன் காலில் ஒரு கடி கடித்தது. இதனால் வேடன் குறி தப்பி வானில் வட்டம் இட்ட ஒரு பருந்தின் மீது அம்புப்பட்டு இறந்தது. புறா உயிர் பிழைத்தது. வேடன் ஏமார்ந்து போனான்.

நீதி: "நல்ல நட்பு நல்லது".
Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்