வாழ்க்கையில் உயர

ஒரு பள்ளிக்கூடம் பக்கத்தில் ஓர் பலூன் விறிப்பவர் பலூன் விற்றுக்கொண்டு இருந்தார். அவை எல்லாம் மேலே பறக்கும் பலூன்கள். 
அவர் அந்த பலூனை காற்றடைத்து விற்றுக்கொண்டு இருந்தார். அதை ஒரு சிறுமி கவனித்துக்கொண்டு இருந்தாள்.
மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

"இந்த பலூங்கள் எல்லாம் மேலே பறக்குமா? " என்று கேட்டாள். "அதற்கு ஓ பறக்குமே" என்ன விஷயம்?.

"பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா" என்று மீண்டும் கேட்டாள். சிறுமி ஏன் இப்படி கேட்கிறாள் என்று பலூன்காராருக்கு புரியவில்லை. ஏம்மா கேக்குற?.

"இல்ல கருப்பு கலர்ல இருந்தாலும் பறக்குமா?" பலூன்காராருக்கு இப்பபொழுது விஷயம் புரிந்தது.

அந்தச் சிறுமியின் நிறம் கருப்பு. அதற்கு அந்த பலூன்காரர் பலூன் மேலே போறதுக்கு கலர் முக்கியம் இல்ல அதில் நிரப்பபடும் வாயு (காற்று) தான் காரணம்.
அது இருந்தால் எந்த கலரும் மேலே பறக்கும்.

 அதைப்போல் தான் நாமும் கலர் முக்கியம் இல்லை உள்ள இருப்பதுத்தான் முக்கியம்.
உள்ளே இருப்பது சரியா இருந்த நாமும் உயர பறக்கலாம் என்றார்.

நீதி: "எண்ணம் உயர்வாக இருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும்".


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்