நரியிடம் ஏமாந்த சிங்கம்


ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அதற்கு ஒரு வினோத ஆசை இருந்தது என்னனா எப்பவும் தன்னைப்பற்றி பெருமையாக பேச வேண்டும்.

ஒரு நாள் சிங்கம் அனைத்து மிருககளை வரச்சொல்லிச்சு அனைத்தும் வந்தன.

முதலில் ஒரு குரங்கைக்கூப்பிட்டு தன் உடம்பை முகர்ந்து பார்க்கச்சொல்லி அது எப்படி இருக்குனு கேட்டுச்சு.

உடனே அரசே உங்க உடம்பில் இருந்து கெட்ட வாசனை வருகிறது என்றது குரங்கு இதை கேட்ட சிங்கம் என்ன சொன்னாய் என்று ஓங்கி ஒரு அறை விட்டது.

அடுத்து கரடியை வரச்சொல்லிச்சு. இப்ப நீ சொல்லு உடனே சிங்கத்தின் உடம்பை முகர்ந்து ஆக என்ன ஒரு அற்புதமான வாசனை நான் இதுவரை இப்படி ஒரு வாசனையை முகர்ந்து கிடையாது என்று சொன்னது.

இதை கேட்ட சிங்கம் என்னிடம் பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது.
இந்த முறை நரியை கூப்பிட்டு நீ தான் கரெக்ட்டானா ஆளு நீ சொல்லு என்றது. ஒரு நிமிடம் குரங்கையும், கரடியையும் நினைத்து பார்த்தது.

என்ன யோசனை என்றது சிங்கம்,  இல்லை அரசே எனக்கு மிகவும் ஜலதோஷாமாக இருக்கிறது என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பியது.

#childrenstroies,#smallstories, #bedtimestroies, #story, #stories

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்