வாழ்க்கையில் வெற்றிப்பெறஒரு ஆசிரமம் இருந்தது. அங்க நேரிய மாணவர்கள் அந்த ஆசிராமத்தில் கல்விக்கற்று வந்தார்கள்.

அதில் ஒரு மாணவனுக்கு ஒரே குழப்பம் நம் வாழ்க்கை இப்டியே சென்று விடுமா என்று ஒரே நினைப்பாக இருந்தது.

அவனால் மற்ற விஷயகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதை நினைப்பாக இருந்தது. நம் வாழ்வில் அடுத்த நிலை என்ன ஆகும் மிகவும் பயந்து காணப்பட்டான்.

இவன் நடவடிக்கை கவனித்த அவன் குரு அவனை அழைத்து என்ன விஷயம் என விசாரித்தார்.

பின்பு சிரித்துக்கொண்டே நீ போய் பக்கத்து அறைக்கு சென்று ஒரு புத்தகம் பெயரைச்சொல்லி எடுத்து வர சொன்னார்.

அவன் அங்கு சென்று ஒரே இருட்டாக இருந்தது. திரும்ப வந்து ஒரே இருட்டாக இருக்கிறது. எப்படி அந்த புத்தகத்தை தேடி எடுப்பது என்றான் உடனே அந்த குரு ஒரு விளக்கை கொடுத்து அனுப்பினார். இப்பொழுது விளக்கை வைத்து புத்தகத்தைத்தேடி குருவிடம் கொடுத்தார்.

உடனே அந்த குரு அவனிடம் நீ எவ்வாறு இந்த புத்தகத்தை எடுத்தாய் என்று வினாவினார்.

அதற்கு அந்த மாணவன் நடந்ததை கூறினான். அதுபோல் தான் நம் வாழ்க்கையில் நமக்கு ஒரு இலக்குடன் நம் வாழ்க்கையை கொண்டுச்செல்லும் போது நமக்கு வாழ்க்கைக்கு உண்டான அர்த்தம் நம்மை தேடி வரும் என்றார்.

இதை கேட்ட அந்த மாணவன் தெளிவுப்பெற்றான்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்