நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

ஏற்றுக் கொள்



*ஏற்றுக் கொள்...!*

வெற்றியை நோக்கி நகர்கின்றாயேயானால்;

தோல்வி உன்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்

ஏற்றுக் கொள்...!

நேச ஒப்பந்தத்தில்

கைச்சாத்திடுகின்றாயானால்;

பிரிவு உடன்படிக்கையிலும் கையொப்பமிட வேண்டி வரும்

ஏற்றுக் கொள்...!

இன்ப வாகனத்தில் 

பயணிக்கின்றாயானால்;

உனக்கு முன்னாலே 

புறப்பட்டுச் சென்று 

துன்ப வாகனமும் எதிரில் வந்து 

உன்னை முட்டிக் கொண்டு நிற்கும்

ஏற்றுக் கொள்...!

பாதையால் காற்று வாங்க 

நடந்து செல்கின்றாயானால்;

புழுதி வாசத்தோடு தூர் வாசமும் மூக்கை பதம் பார்க்கும் 

ஏற்றுக் கொள்...!

எப்போதும் சிரித்தே முகத்தோடே 

இருக்கின்றாயானால்;

எந்நேரமும் பொறிந்து தள்ளும் முகங்களையும் 

சந்திக்க வேண்டி வரும்

ஏற்றுக் கொள்...!

அன்பாய் பேசியே பழகி 

விட்டாயானால்;

பண்பின்றி பாய்ந்து பேசும் 

நாதாரிகளின் பேச்சையும்

கேட்க வேண்டி வரும் 

ஏற்றுக் கொள்...!

நட்பென்று நம்பி

தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றாயானால்;

நடு முதுகில் குத்தி நாசாகரம் செய்யும் குள்ள நரிகளையும் 

கடக்க வேண்டி வரும்

ஏற்றுக் கொள்...!

நேசமென்று நம்பி 

பாச மழை பொழிகின்றாயானால்;

உன்னை நாசமாக்கி

இன்னொன்றோடு மாறிச் செல்லும் சுயநலப் பிசாசுகளையும்

சுதாகரிக்க வேண்டி வரும்

ஏற்றுக் கொள்...!

உதவி செய்யவே

ஓடோடுகின்றாயானால் ;

உபத்திரங்கள் பல 

உன் தலையை கொட்டும்

ஏற்றுக் கொள்...!

நல்லவனாய் வாழ 

முயற்சிக்கின்றாயானால்;

பழையதையே குத்திக் காட்டி உலகம் உன்னை கெட்டவனாக்கி

பார்க்கவே ஆசை கொள்ளும்

ஏற்றுக் கொள்...!

ஏனெனில்; வாழ்க்கை எல்லா நேரங்களிலும் இன்பப் பூங்கொத்தை மட்டுமே தூக்கி கையில் தரும் என்று எதிர்பார்க்க முடியாது...!


சில நேரங்களில் துன்பப் பாராங்கல்லை தலையில் தூக்கிப் போடவும் தயாராக இருக்கும்...!


எந்த நிலையாக இருந்தாலும் 

ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் வாழ்ந்தால் வாழ்க்கை என்றும் 

இனிப்பாகவே இருக்கும்...



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்