முயற்சி செய்யாமை

ஒரு அரசன் இருந்தான் அவன் ஒரு போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை எந்த உதவியும் இல்லாமல் வேறும் கைகளால் திறக்க வேண்டும்.

அப்பிடி திறக்க தவறினால் அவன் இரு கைகள் வெட்டப்படும். வென்றால் அவனுக்கு நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதை கேட்ட மக்கள் பலவாறு யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். இவனுக்கு என்ன பைத்தியமா அந்த கோட்டை கதவு மலையைவிட  வலுவானது அதை எப்படி திறக்க போகிறான்.

தோற்றால் உன்னுடைய கைகள் வெட்டப்படும். உன் எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள்.

ஐயா, தோற்றால் கைகள் போகும் உயிரில்லையே வென்றால் ஒரு நாட்டுக்கு நான் அரசன் என்று கூறி கோட்டை கதவை தள்ளினான் என்ன அதிசியம்! கதவு சாட்டெனத் திறந்து கொண்டது.

ஏனென்றால், கோட்டை கதவு தாழ்ப்பாள் போடவில்லை திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள்.

தன்னால் முடியாது, அது தேவையில்ல வேலை, எதையாவது இழந்து விடுவோமோ, தோற்று விடுவோமோ என பலவாறு நினைத்து வாழ்க்கையில் முன்னேற தவறி விடுகிறார்கள்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்