முக்காடு

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள் ஏன் என்றால் ஆடையில் தான் பண்பாடு துவங்கும்.
தலையை சுற்றும் கட்டு *ஹிஜாப்* அல்ல,
அது மெல்லியதாக இன்றி அலங்காரம் இன்றி யாரையும் ஈர்க்காமல் உடலின் 
அங்கங்கள் சிறிதும் விளங்காமல் இருக்க வேண்டும்.

ஒரு ஆணுடன் பேசும் போது தனது குரலைப் உயர்த்தாமல் பேணிக் கொள்வது பெண்ணுக்கு அழகு.

உடம்பை முழுமையாக மூடிய ஆடையுடன் அணிந்து வெட்கத்துடன் வெளியே செல்வது பெண்ணுக்கு அழகு.

தனது கணவனுக்கு மட்டும் தனது அழகை வெளிப்படுத்துவது பெண்ணுக்கு அழகு.   

இறைவனுக்கு அஞ்சி பாவத்தின்
பக்கம் செல்லாமல் இருப்பது பெண்ணுக்கு அழகு. 

ஆபாசமான 
விடயங்களில் ஆண்களை ஈர்க்காமல் பாவங்களை விட்டும் விலகிச்செல்வது பெண்ணுக்கு அழகு.

மூடிய ஆடைகளுடன் வெளியே சென்றால் மெலிந்த பெண்ணையும் பார்த்து "நீ கொழுத்து விட்டாயா?? ஆடை பெரிதாக இருப்பதால் இப்படி விளங்குகிறது போல கொஞ்சம் சிறிதாக அணிந்து விடு" என்கிறார்கள்.
*இறையச்சம்* உள்ள பெண்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆண்களே..! உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைப்பாடு என்ன? அது உங்கள் பொறுப்பு இல்லையா?? அதே போல சில ஆண்களுக்கு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களைத் தான் பிடிக்கும். இது ஈமானில் கோளாறு என்பதைக் கவனத்தில் கொள்க.


“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.”

*(Al-Quran - 24:26)*

“யூசுப், மரியம் ஆக இருந்து கொண்டு யூசுப், மரியத்தை தேட வேண்டும்.”


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்