மல்பெரி இலைகள்
- Get link
- Other Apps
கண்டும் காணாமல் இருக்கும் கலை..
நான் புதிதாக ஒரு நிறுவனத்திற்கு மேனேஜராக பதவியேற்று வந்தேன்.
அங்கிருந்த ஊழியர்களில் மிகவும் திறமையான மற்றும் சுறுசுறுப்பான ஒரு இளைஞன் இருந்தான்.
தனக்கு சுமத்தப்பட்ட பணிகளை கனகச்சிதமாக செய்து முடிப்பான், துல்லியமாக வேலை செய்வதில் புத்திசாலி. அவனால் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அடைவுகளும் சாதனைகளும் வந்தடைந்து கொண்டிருந்தன.
ஆனாலும் அவன் பல சமயங்களில் விளையாட்டுத்தம் கட்டுவதை நான்
அவதானித்தேன். பணி நேரத்தில் அனுமதியின்றி வெளியேருவான், சாக்குப்போக்ககள் சொல்லி அளவுக்கதிகம் விடுமுறைகள் எடுப்பான். இவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று நான் தருணம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒருமுறை தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக விடுமுறை கேட்டான்.
நான் 'முடியாது' என நிராகரித்துவிட்டேன்!
அவன் அவனது விளையாட்டை காட்ட ஆரம்பித்தான். தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விடுமுறைக்கு சமர்ப்பித்தான். நானும் அனுமதியளித்தேன்.
அவனுக்கு எந்த நோயும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவனை கையும் களவுமாக பிடிக்க இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தினேன்.
அதிகாலையில் அவன் வீட்டிற்கு அருகாமையில் சென்று காத்திருந்தேன்.
அவன் சுற்றுலா செல்வதற்காக பயணப் பொதிகளுடன் வெளியே வந்தான்.
என்னைக் கண்டதும் அவமானத்தால் வெட்கித்தான், முகம் சுழித்தான்.
நான் அவனிடம்: என்னை ஏமாற்ற முடியாது, நான் ஸ்டிரிக்கான மனேஜர்,
என்னிடம் இந்த விளையாட்டுக்கள் சரிவராது. என்று எச்சரித்தேன். அத்தோடு ஒரு நாள் சம்பளத்தையும் குறைப்பதற்காக அவனிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
மறு நாள் அவன் வந்தான். தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான். பணியிலிருந்து நின்றுவிட்டான். பின்னர் என்ன நடந்தது. என் நிறுவனத்தின் அடைவுகள் குறைய ஆரம்மபித்தன, சாதனைகள் சரிய ஆரம்பித்தன. அவன் போன்று திறம்பட பணி புரியும் ஒரு ஊழியரை தேடி எடுப்பது கடினமானது. அவனது இடத்தை நிரப்புவது சவாலானது. இங்கே எனது அடிமட்ட முட்டாள்தனம் வெளிப்பட்டது.
இங்கு நான் படித்த சில பாடங்கள்...
நம் வாழ்வில் இழக்கும் சில இழப்புக்கள் அடைவுகளாகும். வரும் சில தோல்விகள் வெற்றிகளாகும். சில விட்டுக் கொடுப்புக்கள் சிறந்த தீர்வுகளாகும்.
சில சமயம் நமது கடும்போக்கால், நமது கட்டுப்பாடுகளால் நமக்கு நாமே இழப்புக்களை வரவழைத்துக் கொள்கிறோம். ஆதரவுகளை இழந்துவிடுகிறோம். எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொள்கிறோம். சில விட்டுக்கொடுப்புக்கள் மதிநுட்பமாகும்.
சில சமயங்களில் உங்களுக்கு கீழுள்ளவர்களின் தவறுகளை நீங்கள் கையும் களவுமாக பிடித்தால் அவர்களை மானம் மரியாதையாக வெளியேற வழி விடுங்கள். அதனால் அவர்கள் உங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக உங்களை மதிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில விட்டுக் கொடுப்புக்கள் கொளரவமாகும்.
உண்மையில் சில விட்டுக்கொடுப்புக்கள், சில முடி மறைத்தல்கள், சில கண்முடித்தனங்கள் நம்மை பாதுகாக்கும்
மல்பெரி இலைகளாகும்.
கவனமில்லாமல் இருப்பவன் சமூகத் தலைவனாக இருக்க முடியாது. அனால் சமுகத் தலைவன் கட்டாயம் கண்டும் காணமல் இருக்க வேண்டி வரும்.
நாம் தொடுக்கும் போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூட வேண்டிய கடமை இல்லை. சில இடங்களில் தோற்பதே வெற்றியாகும்.
கோடை காலம்தானே என்று உங்கள் படகுகளை எரிக்காதீர்கள்! என்றோ ஒரு நாளைக்கு வெள்ளம் வரலாம், அப்போது தேவைப்படலாம்.
நாம் நினைப்பது போல எல்லா விட்டுக்கொடுப்புக்களும் முட்டாள்தனமாகாது, எல்லா கவனயீனமும் உதாசீனமாகாது.
- Get link
- Other Apps