பொறுமையின் மதிப்பு

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை வெஸ்டன் யூனியன் கம்பனிக்கு ஓர் இயந்திரம் வடியமைத்து கொடுத்தார். அதற்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து பெரும் குழப்பமாக இருந்தார். இதைப்பற்றி தன் மனைவியிடம் விவாதித்தார்.

அவர் மனைவி இருப்பதாயிரம் டாலர் கேளுங்கள் என்றார். ஆனால் எடிசன் இந்த தொகை அதிகம் என்று யாரும் வாங்கமால் சென்று விட்டால் என்ன செய்வது? என்று ஒரே சிந்தனையில் இருந்தார்.

பணம் தருவதற்கு கம்பெனி ஒரு அனுபவ மிக்க அதிகாரியை அனுப்பிவைத்தது.
அதிகாரி அதற்கு உண்டான விலையை கேட்டார் எடிசன் எப்படி எவ்வளவு தொகையை கேட்பது என்று யோசித்து இருந்தார்.

பொறுமையை இழந்த அதிகாரி முதல் தவணையாக நூறு ஆயிரம் டாலர்க்கு உண்டான காசோலையை கொடுத்து மீதம் எவ்வளவு என்று சொல்லி அனுப்புகள் என கூறி இயந்திரத்தை எடுத்து சென்று விட்டார்.

அவசரம் இல்லாமல் பொறுமை காத்த எடிசனுக்கு அதிக லாபம் கிடைத்தது. ஒரு பாறை தன் பொறுமையை இழக்க நேரிடும் போது அது வெறும் கல்லாக மாறும் அதை பொறுமை காத்தல் பெரும் மதிப்பு மிக்க சிலையாக மாறும்.

நீதி: பொறுமையே கடலினும் பெரிது 





Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்