மனப்பாங்கு

ஒரு நாள் தன் அப்பாவுடன் கோவிலுக்கு சென்றான் ஓர் சிறுவன் அங்கு அவன் ஒரு பெரிய யானை வெறும் சங்கிலியால் கட்டி இருப்பதை பார்த்தான்.
அதை பார்த்து அந்த சிறுவன் அப்பா இந்த யானை வேறு சங்கிலியால் மட்டும் கட்டி இருக்கிறது அந்த பெரிய யானை அதை அறுத்துச் செல்லதா என்று கேட்டான்.

அதற்கு அப்பா நிச்சியமாக செல்லாது என்றார். இப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க என்றான்.

இது குட்டி யானைய இருக்கும்பொழுது இதைப்போல் அதை இதை விட கடினமான சங்கிலியால் கட்டி வைப்பார்கள்.

 ஆனால் அது அதிலிருந்து மீள பல முயற்சிச்செய்யும் அதனால் முடியாது முயற்சி செய்துக்கொண்டே இருக்கும் நாளாடைவில் முடியாது என்று முயற்சி செய்வதை கைவிட்டு விடும்.

அதன் பிறகு முயற்சி செய்வதை நிறுத்திவிடும். இனி நம்மால் முடியாது என்னும் மன நிலைக்கு வந்து விடும்.

இப்ப இதை ஒரு சாதாரண கயிறு மூலம் கட்டி வைத்தாலும் அது தப்ப நினைக்காது.

இது யானைக்கு மட்டும் இல்லை நமக்கும் பொருந்தும் நாம் பல முயற்சிகள் செய்து இருப்போம் ஆனால் ஒரு தோல்வினால் நாம் முயற்சி செய்வதை முற்றிலும் தவிர்ப்போம்.

 இனி நம்மால் முடியாது என்னும் மன நிலைக்கு வருவோம் பிறகு முயற்சியா அப்பிடினா என்ன?, அது தேவையில்லா வேலை, ரெம்ப வேஸ்ட், டைம் வேஸ்ட், நமக்கு சரிப்பட்டு வராது எண்ணும் பல மனப்பாங்குக்கு வந்துவிடும்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்