புத்தியை தீட்டு



ஒரு ஊரில் இரு மர வெட்டிகள் இருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் காட்டில் சென்று மரம் வெட்டி தன் பிழைப்பை நடத்தி வந்தனர்.

ஆனால் இருவரும் காலையில் ஒரே நேரம் சென்று மாலையில் ஒரே நேரம் வருகிறார்கள். ஒரு விறகு வெட்டியிடம் மட்டும் அதிக விறகு வெட்டி வந்தார்.

அதை விற்று நல்ல வருமானம் பார்த்து வந்தார். அதை பார்த்த இன்னரு மர வெட்டிக்கு ஆச்சரியம் இரண்டுப்பேரும் ஒரே நேரம் செல்கிறோம் ஒரே நேரம் வருகிறோம்.

ஆனால் என்ன வித்தியாசம் இதை அந்த விறகு வெட்டியிடம் கேட்டான். அதற்கு அந்த விறகு வெட்டி ஒன் புத்தியை திட்டு என்று சொல்லி சென்று விட்டார், 
இருந்தும் விறகு வெட்டிக்கு அதை அறியும் ஆர்வம் குறையவில்லை.

ஒரு நாள் அந்த விறகு வெட்டிக்கு தெரியாமல் பின் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணித்தார்.

சிறிது நேரம் அந்த விறகு வெட்டி தன் வேலையை ஆரம்பித்தார் அதன் பிறகு ஓய்வு எடுத்தார் அந்த ஒய்வு நேரத்தில் அவர் சும்மா இருக்கவில்லை தன் கோடாரியை கூர்ச்செய்தார்.

இப்பிடியாக அவர் ஓய்வு நேரத்தில் செய்துக்கொண்டு இருந்தார். பிறகுத்தான் அந்த விறகு வெட்டிக்கு புரிந்தது.

இதுதான் புத்தியை திட்டுவாத என்பதை புரிந்து கொண்டுடார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்