மளிகைக் கடைக்கார்ஒரு ஊரில்  ஒரு மளிகைக் கடைக்காரர் இருந்தார். அந்த ஊரில் அவர் கடை மட்டும் தான் இருந்தது ஆகையால் அந்த ஊர் மக்கள் அந்த கடையில் அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வந்தனர். அவரும் மகிழ்ச்சியாக இருந்தார். நல்ல லாபமும் கிடைத்தது. இப்டியே காலம் சென்றது.

ஒரு நாள் அவர் கடை அருகில் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டன. அதில் இருந்து அவர் வியாபாரம் மிக மோசம் ஆனது. மக்கள் வரவு குறைந்தது. மிகவும் சிரமம்ப்பட்டார். அந்த சமயம் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார் அவர் பல பேர் குறைகளை சரி செய்தார்.

இதை கேள்விப்பட்ட அந்த கடைக்கார், அந்த சாமியாராய் பார்த்து தன் குறைகளை கூறினார். அதை கேட்ட சாமியார்  இன்று முதல் கடையை திறந்தவுடன் நானும், அந்த சூப்பர் மார்க்கெட்டும் நல்ல இருக்க வேண்டும் என்று உன் சாமியை வேண்டிகோ இதை கேட்ட அவர்க்கு மிகவும் குழப்பமகா இருந்தது.

சரி ஆனது ஆகட்டும் அவர் சொன்னதுப்போல் செய்தார். அவர் கடையில் இல்லததை சூப்பர் மார்க்கெட்க்கு போய் வாங்க சொன்னார். இதை அறிந்த அந்த சூப்பர் மார்க்கெட் முதலாளி அந்த கடைக்காரை வரச்சொல்லி பாராட்டினார். அன்று முதல் இருவருக்கும் நல்ல நட்பு உருவானது. ஒரு நாள் சூப்பர் மார்க்கெட் முதலாளி கடைக்காரிடம் வந்து நான் என் சொந்த ஊருக்கு போற யோசனை இருக்கு அங்கப்போய் புது சூப்பர் மார்க்கெட் திறக்கும் யோசனையில் இருக்கு ஆதலால் இந்த சூப்பர் மார்க்கெட்டை பார்க்கும் இல்ல நீங்க இத வச்சு பார்த்துக்க முடியுமா என்று கேட்டார். சற்று தயங்கியப்படி கடைக்கார் ஏன் அங்க இருந்து இதை கவனிக்க வேண்டியதுதான என்று கூறினார். அதற்கு சூப்பர் மார்க்கெட் முதலாளி இல்ல எனக்கு அங்கு நிறைய வியாபாரம் இருக்கு என்று கூறினார்.
பின்பு ஒரு வழியாக ஒப்புக் கொண்டார். அதன்பிறகு பழையப்படி அவர் வாழ்வு சிறப்பாக அமைந்தது. அந்த நேரம் சாமியார் ஊருக்கு வந்தார். நடந்ததை கூறி மகிழ்தார்.

“உங்களுக்கு எது வேண்டுமோ அதை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்.” - ஹுனா தத்துவம்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்