சிறிய மீனும் மீனவனும்



ஒரு ஊருல ஒரு மீனவன் இருந்தான். அவன் தினமும் அருகில் உள்ள ஒரு பெரிய ஏரியில் மீன்ப்பிடித்து அதை பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் விலைக்கு வித்து தன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
இப்பிடியே தன் வாழ்நாளை வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றார்.
ஆனால் இம்முறை வெகுநேரம் ஆகியும் ஒரு மீனும் கிடைக்கவில்லை. அதனால் ரெம்ப வருத்தத்துடன் காணப்பட்டார்.
இப்பிடிய நேரம் போய்க்கொண்டு இருந்தது.
அப்போ அவர் தூண்டிலில் ஒரு சிறிய மீன் மாட்டியது.
பிறகு அதிக நேரம் ஆனதால் அந்த மீனை தன் குடையில் வைத்து கிளம்பப் போனார். அப்போ அந்த சிறிய மீன் சொன்னது என்னை எப்ப உயிருடன் விட்டால் நான் பெரிய மீனாக ஆனதும்.
நான் மட்டும் இல்லாமல் என்னுடைய மற்ற எல்லா மீனையும் பிடிக்க உதவி செய்வன் என்று சொன்னது.
அதை கேட்ட மீனவன் நான் ஒன்னும் முட்டாள் இல்லை என் தொழிலே மீன் பிடிப்பதுத்தான்.
இன்று நீ கிடைத்தது ரெம்ப பெரிய விஷயம் என்று சொல்லி கூடையை
எடுத்துக்கொண்டு அங்கு இருந்து சந்தோசமாக கிளம்பினார்.

பழமொழி:
நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்