ஜெயிக்க பிறந்தவர்கள்ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தார். அவர் செய்து வந்த வியாபாரம் பெரும் நஷ்டம் அடைந்தது.

அதை எண்ணி மிகவும் வருத்தத்துடன் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்.

அப்பபொழுது அங்க ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. அதிலிருந்து ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்துச்சென்றார்.

பிறகு ஒன்னாருவர் தனக்கு தேவையான காலி பழைய பாட்டில்களை எடுத்துச்சென்றார்.

ஒரு அம்மா வந்து தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்சென்றார்.

ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.

பிறகு ஒரு மாடு வந்தது அதில் இருந்த எச்சில் இலையை சாப்பிட்டு சென்றது.

இதை பார்த்த அந்த வியாபாரி ஒரு சிறு குப்பைத்தொட்டியில் இருக்கும் ஒன்னுக்கு ஆகாத பொருட்கள். இத்தனை பேருக்கு வாழ்வதாரமாக இருக்கு.

 இந்த பரந்த விரிந்த உலகில் எனக்கு என்ன வாய்ப்பு இல்லாமல் இருக்கும்.

 இனி வரும் காலம் அனைத்தும் எனக்கு பொற்க்காலமே என தன் பழைய வியாபாரத்தை தொடங்க சென்றார்.

நாம் அனைவரும் ஜெயிக்க பிறந்தவர்களே. நன்றி 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்