கழுதையும் எருதும்



ஒரு விவசாயிருந்தார் அவர் விலங்குகள் பேசும் மொழியை புரிந்து கொள்ளக்கூடிய திறமை படைத்தவர். அவருக்கு ஒரு பண்ணை இருந்தது. அங்க பல விலங்குகள் மற்றும் பறவைகள் இருந்தன.

தன் ஓய்வு வேளையில் விலங்குகள் மற்றும் பறவைகள் தமக்குள் என்ன பேசிக் கொண்டன என்பதைக் கொள்வதற்கு தன்னுடைய பண்ணைப் பக்கம் செல்வார்.
அப்படி ஒருநாள் அவர் அங்கு சென்றபோது, தான் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி ஓர் எருது ஒரு கழுதையிடம் புலழம்பி கொண்டிருந்ததைக் கேட்டார்.

எருது காலையிலிருந்து மாலை வரை வயலில் ஏர் இழுத்துக் கொண்டு இருக்கிறேன். அன்று எவ்வளவு வெயினாலும் சரி, எவ்வளவு பசியானாலும் சரி, எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி, கயிறு கழுத்தை எவ்வளவுத்தான் அறுத்தாலும் சரி நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

உன் பாடு பரவாயில்லை நம் முதலாளியை சுமந்து செல்வது மட்டும் தான் வேலை மற்ற நேரம்  ஜாலியாக ஓய்வு எடுத்துக் கொண்டு வேண்டிய உணவை தின்றுக் கொண்டு இருக்கலாம்.

இதைக்கேட்ட கழுதை சிரித்தது பின்பு உனக்கு ஒரு யோசனை கூறிக்கிறேன். அதன் படி நடந்தால் உனக்கு ஓய்வு கிடைப்பது உறுதி என்றது.

காலையில் நம் முதலாளியின் வேலையட்கள் வரும் பொழுது தரையில் படுத்துக்கொண்டு சத்தமாக முனகு. உனக்கு உடல்நிலை சரியில்லை, உன்னால் வேலைசெய்ய முடியாது என்பார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு நீ ஓய்வு எடுக்கலாம் என்று கூறியது.

மறுநாள் காலை இதைப்போல் செய்தது. எருதை பார்த்த வேலையட்கள் முதலாளியிடம் இன்று எருதுவை ஏர் பூட்ட முடியாது என்றார்கள்.

அப்படிய இன்று அந்த கழுதையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டு உழுவை நிறுத்த வேண்டாம் என்றார் விவசாயி.

எருதுக்கு உதவா நினைத்த கழுதைக்கு அன்று முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால், அன்று முழுவதும் எருது ஜாலியாக இருந்தது.

மாலையில் கழுதை ரெம்ப சோர்வுடன் வந்தது. ஆனால் எருது பாட்டு பாடி மிகவும் சந்தோசமாக இருந்தது இதை பார்த்த கழுதைக்கு ரெம்ப கோவம் வந்தது.

உனக்கு உதவிய பயனை நன்றாக அனுபவிச்சுட்டேன். மேலும் இனி இப்படி நடித்தால் உன்னை கசப்புக் கடைக்கு அனுப்பிவிடுவார்கள் என்று கூறியது.

அதன்பிறகு நம் முதலாளிக்கு பெரும் துரோகம் செய்ததை நினைத்து மனம் வருந்தி அன்றுமுதல் கழுதை எருதுவிடம் பேசுவதை நிறுத்தியது.

தேவையில்ல நட்பு நம் நலனையும் கேடுக்கும்.


நீதி: தன் வினை தன்னை சுடும்.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்