நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

ஒற்றுமையே பலம்



ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க.

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,சண்ட போட்டுட்டு ஒருத்தரும் விவசாய வேலை செய்யாம நேரத்த வேஸ்ட் பண்ணிகிட்டே இருப்பாங்க.

அதனால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு, தன்னோட மகன்களை எப்படி திருத்தணும்னு யோசிச்சுகிட்டே இருந்த அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு.

ஒருநாள் அந்த பயலுகள கூப்பிட்டாரு அந்த விவசாயி,நான் இன்னைக்கு ரெண்டு போட்டி வைக்க போறேன் ,ஜெயிக்கிறவங்களுக்கு என்னோட எல்லா சொத்தையும் கொடுப்பேன்னு சொன்னாரு.

உடனே அந்த மூணு மகன்களுக்கும் மூணு கரும்பு கட்டுகள கொடுத்து ,இத எல்லாம் பிரிச்சி ஓடைங்க இதுதான் முதல் போட்டின்னு சொன்னாரு.

உடனே அந்த மூணு மகன்களும் அந்த கட்ட பிரிச்சி ,ஒவ்வொரு கரும்பா எடுத்து ஈஸியா எல்லா கரும்பையும் ஒடச்சிட்டாங்க.

இத பார்த்த அந்த விவசாயி சிரிச்சிகிட்டே , அதே மாதிரி திரும்பவும் மூணு கரும்பு கட்ட அவுங்ககிட்ட கொடுத்து ,இப்ப இந்த கட்ட பிரிக்காம எல்லா கரும்பையும் ஒரே நேரத்துல ஒடைக்கணும் இதுதான் ரெண்டாவது போட்டின்னு சொன்னாரு.

ஆனா இந்த தடவ எவ்வளவு முயற்சி செஞ்சும் அவுங்களால அந்த முழு கரும்பு கட்ட உடைக்க முடியலை.

அப்பத்தான் அந்த விவசாயி சொன்னாரு ,நீங்களும் இந்த கரும்புகள் போலத்தான் ,தனி தனியா இருந்தா உங்களை ஈஸியா ஒடைச்சுடுவாங்க.

அதே நேரத்துல ஒற்றுமையை இருந்தீங்கன்னா உங்களை யாராலயும் எதுவும் செய்ய முடியாதுனு சொன்னாரு.

இத கேட்ட அந்த மூணு பேருக்கும் அப்பத்தான் உண்மை புரிஞ்சுச்சு ,இத்தனை நாள் மூணு பேரும் தங்களுக்குள்ள சண்டை போட்டதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அன்னைல இருந்து அவுங்க மூணுபேரும் ஒண்ணாவே விவசாயம் செஞ்சாங்க ,நிறய உழைப்பை அவுங்க கொடுத்ததால கொஞ்ச நாள்லயே பணக்காரங்களா மாறிட்டாங்க அந்த அண்ணன் தம்பிகள் மூணு பேரும்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்