கண்ணாடி மலையில் இளவரசிஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க.
ஒருத்தன் பேரு கென் அவன் ரொம்ப திறமைசாலியா இருந்தாலும் சோம்பேறி இருந்தான்.
அடுத்தவன் பேரு ஜின் அவன் நல்லவனா இருந்தாலும் பயந்தாங்கோலிய இருந்தான்.
ஆனா மூணாவது மகன் ஜான் எல்லா திறமையும் உள்ளவனா இருந்தான்.
ஒருநாள் அந்த விவசாயி அப்பா அவுங்க மூணு பேத்தயும் கூப்பிட்டாரு.
ஒரு வாரமா நம்மளோட வயல்ல இருக்குற விளைச்சல் எல்லாத்தையும் ஏதோ ஒரு மிருகம் தின்னுட்டு போயிடுது ,அது என்னனு தெரியல எந்த காலடி தடமும் கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னாரு.
அத கேட்ட மூணு மகன்களுக்கும் ஒரே ஆச்சர்யமா போச்சு ,அது எப்படி வயலுக்கு வந்து பயிர்களை திங்குற மிருகத்தோட காலடி யாருக்கும் தெரியாம போச்சுன்னு ஆச்சர்ய பட்டாங்க.

அதனால அன்னைக்கு கென் வயலுக்கு காவலுக்கு போறதா சொல்லிட்டு நடந்து போனான்.
அவன் ராத்திரி காவல் இருக்கும்போது எதோ மிருகத்தோட சத்தம் அவனுக்கு கேட்டுச்சு உடனே பயந்துபோன கென் வேகமா வீட்டுக்கு ஓடி வந்துட்டான்.
அடுத்தநாள் ஜின் காவலுக்கு கிளம்பி நடந்து போனான் , அவனுக்கும் ரொம்ப பயமா இருந்துச்சு.
வயலுக்கு போயி காத்திருந்த ஜின்னுக்கும் அந்த மிருகத்தோட சத்தம் கேட்டுச்சு ,ஏற்கனவே பயந்து போயிருந்த ஜின்னுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு.
அதனால வேகா வேகமா வீட்டுக்கு ஓடி வந்துதான் ஜின்.
வீட்டுக்கு வந்த ஜின் கிட்ட விஷயத்தை கேள்விப்பட்ட தைரிய சாலியான ஜான் நான் அடுத்தநாள் போய் அந்த மிருகத்தை கண்டுபிடிக்கிறேன்னு சொன்னான்.
மறுநாள் வயலுக்கு போன ஜான் அந்த மிருகத்தோட சத்தம் கேட்டதும் அந்த மிருகம் சத்தம் எங்க இருந்து வருதுன்னு பார்த்து அங்க மெதுவா நடந்து போனான்.

அங்க ஒரு வெள்ளை கலர் மாய குதிரை வயல்ல இருக்குற பயிர்களை எல்லாம் சாப்டுகிட்டு இருந்துச்சு.
அத பார்த்த ஜான் மெதுவா அது கிட்ட போய் அத தொட்டான் ,குதிரை அவனுக்கு லேசா தலையை ஆட்டுச்சு ,அதனால ஒரு கரும்ப எடுத்துக்கு அதுக்கு சாப்பிட கொடுத்தான்.
உடனே அந்த மாய குதிரை ஒரு பித்தளைல செஞ்ச கவசத்தை அவனுக்கு பரிசா கொடுத்துட்டு ஓடிடுச்சு.

அத கவசத்தை வீட்டுக்கு கொண்டுபோனா வீணா பிரச்னை வரும்னு நினைச்ச ஜான் அத அங்கேயே ஒரு இடத்துல மறைச்சு வச்சான்.
மறுநாளும் அந்த குதிரை அங்க வந்துச்சு ,அப்ப ஜான் அதுக்கு ஒரு வெல்லக்கட்டி சாப்பிட கொடுத்தான் உடனே வெள்ளியில செஞ்ச கவசத்தை அவனுக்கு கொடுத்துச்சு அந்த மாய குதிரை.
மறுநாள் அங்க வந்த குதிரைக்கு நிரைய சாப்பாடு கொடுத்தான் ஜான் ,அன்னைக்கு அந்த குதிரை தங்கத்துல செஞ்ச கவசத்தை அவனுக்கு கொடுத்துச்சு.
ஜானும் அந்த குதிரையும் ரொம்ப நண்பர்களா மாறிட்டாங்க ,அடுத்தநாள் காலையில அரண்மனை தளபதி அந்த ஊருக்கு வந்தாரு.

அரசரோட மகளான இளவரசிய ஒரு சூனியக்காரி பக்கத்துல இருக்குற கண்ணாடி மலை மேல கொண்டு போய் விட்டுடுச்சு ,யாராலயும் அவளை காப்பாத்த முடியல ,அவளை பத்திரமா கூட்டிட்டு வரவங்களுக்கு அரசர் பரிசு கொடுப்பாருனு சொன்னாரு அந்த தளபதி.
உடனே கென் அந்த கண்ணாடி மலைக்கு போயி மெதுவா மேல ஏற பார்த்தான் ஆனா அந்த மலை முழுசும் வழுக்குற கண்ணாடி இருந்ததால அவன் பாதி மலை ஏறுனதும் வழுக்கு கீழ் வந்துட்டான்.
உடனே ஜின் அந்த மலை மேல ஏற ஆரம்பிச்சான் ,அவனாலயும் அந்த மலைமேல முழுசா ஏற முடியல.
ஆனா ஜான் அந்த மந்திர குதிரையை கூப்பிட்டு அதுமேல அந்த குதிரை கொடுத்த பித்தளை கவசத்தை போட்டுக்கிட்டு வேகமா ஓடி அந்த கண்ணாடி மலை மேல ஏற ஆரம்பிச்சான்.
பாதி தூரம் ஏறுனதும் அந்த குதிரைக்கும் கண்ணாடி கால் வழுக்கிடுச்சு ,அப்படியே குதிரையோட ஜான் கீழ விழுந்துட்டான்.
உடனே அந்த மாயா குதிரை அவனுக்கு கொடுத்த வெள்ளி கவசத்தை எடுத்து போட்டுக்கிட்டு திரும்பவும் மலை மேல ஏற முயற்சி செஞ்சான் ஜான்.
இந்த தடவ முக்காவாசி கண்ணாடி மலை மேல ஏறுனதும் குதிரைக்கு கால் வழுக்கிடுச்சு அதனால் அவனும் குதிரையும் கீழ விழுந்துட்டாங்க.

கீழ விழுந்த ஜான் விடா முயற்சியோட தங்க கவசத்த மாட்டிகிட்டு மாயக்குதிரை மேல ஏறி தங்க மலை மேல ஏற முயற்சி செஞ்சான்

ஆனா இந்த தடவ சுலபமா அந்த மலை மேல ஏறிட்டான் ,அவனை பார்த்த இளவரசிக்கு ரொம்ப சந்தோசம்.
அவுங்களையும் குதிரை மேல ஏத்திக்கிட்டு மெதுவா கீழ வந்தான் ஜான்.

நேரா அரண்மனைக்கு வந்து இளவரசியை அரசர் கிட்ட ஒப்படைச்சான் ஜான் ,உடனே அரசர் அந்த அரசாங்கத்தையே அவனுக்கு பரிசா கொடுத்தாரு.
அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது ,ஜான் தன்கிட்ட இருந்த கவசங்களாலயோ மாயா குதிரயாலயோ அந்த மலை மேல ஏர ல அவன்கிட்ட இருந்த தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே அவனோட சாதனைக்கு காரணம்னு தெரிஞ்சிக்கிட்டாங்க
😍

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்