புலியும் நான்கு பசு மாடுகளும்



ஒரு மிக பெரிய காட்டுல நாலு பசு மாடுகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க.
அந்த நாலு மாடுகளும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க ,அவுங்க எப்பவும் ஒரே இடத்துலதான் இருப்பாங்க.
அதனால அவுங்களுக்கு எந்த ஆபத்தும் வரவே இல்ல ,எப்ப எந்த மிருகம் அவுங்கள வந்து தாக்கினாலும் அவுங்க நாலு பேரும் ஒண்ணா சேர்ந்து அதுங்கள விரட்டி விட்டுடுவாங்க.

அந்த பசு மாடுகளை சாப்பிடணும்னு ஒரு புலி ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்துச்சு ,ஆனா அதுக்கான சந்தர்பம் அதுக்கு கிடைக்கவே இல்ல.
ஒரு நாள் அந்த நாலு பசு நண்பர்களும் ஒரு முடிவு பண்ணுனாங்க, ஒவ்வொருத்தரும் தனி தனியா போயி அவுங்களோட வாழ்க்கை அமைச்சிக்கிடணும்னு.
அதனால எல்லாரும் ஆளுக்கு ஒரு திசையில நடக்க ஆரம்பிச்சாங்க ,அத பார்த்த புலிக்கு ரொம்ப சந்தோசம்.
நேரா ஒரு பசு மாட்ட போயி அடிச்சி திண்ணுடுச்சு அந்த புலி, அடுத்த நாள் இன்னொரு பசுவ அடிச்சி திண்ணுச்சு.
கடைசி பசுவ அது அடிச்சி திங்க வந்தப்பத்தான் அந்த பசுவுக்கு புரிஞ்சிச்சு, நாலு நண்பர்களும் ஒண்ணா இருந்தப்ப ஒற்றுமையின் பலம் என்னனு.
இருந்தாலும் காலம் ரொம்ப வேகமா போய்டுச்சு ,அதோட எல்லா நண்பர்களயும் தின்ன அந்த புலி கடைசியா அந்த பசுவையும் வேட்டையாடி திண்ணுடுச்சு

நீதி : ஒற்றுமையே பலமாம்

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்