நிலா வெளிச்சம்ஒரு குட்டி நகரத்துல ஒரு பேய் வீடு இருந்துச்சு.
அந்த வீட்டுல இருந்து சமைக்கிற வாசனையும் , இசையும் கேக்குறதா அந்த ஊர் மக்கள் நம்புனாங்க ,அதனால அந்த வீட்டு பக்கத்துல கூட யாரும் போகமாட்டாங்க.
அப்ப ஒருநாள் ஒரு தைரியமான ஆளு அந்த வீட்ட வாங்க வந்தாரு ,ஊர் காரங்க எல்லாம் அந்த வீட்ட வாங்காதீங்க இது பேய் வீடுன்னு சொன்னாங்க.
பேய் வீடானு கேட்ட அவருகிட்ட யாருமே இல்லாத இந்த வீட்டுக்குள்ள இருந்து சமைக்கிற வாசனையும் , இனிமையான இசையும் கேக்குது அதனால இத வாங்கி ஆபத்துல சிக்கிடாதீங்கன்னு சொன்னாங்க.
ஆனா அந்த வீடு வாங்க வந்தவரு ரொம்ப தைரியசாலியா இருந்தாரு ,ஊர் காரங்க யார் பேச்சையும் கேக்காம அந்த வீட்ட வாங்கி அதுல குடி போனாரு.
அந்த வீட்டுக்கு போன அன்னைக்கு ராத்திரி ,நிஜமாவே சமைக்கிற வாசனையும் ,இசை சத்தமும் கேட்டுச்சு.
அவரோட பையனும் ,மனைவியும் ரொம்ப பயந்து போனாங்க, அதனால அவுங்க ரெண்டு பேரையும் பக்கத்து வீட்டுல பாதுகாப்பா தங்க வச்சாரு.
உடனே அவரு அந்த ஊர் தலைவரை போய் பார்த்தாரு ,அவரு எனக்கு தெரிஞ்ச ஒரு பேய் ஒட்டுறவர் இருக்காரு அவரு கிட்ட உதவி கேளுங்கன்னு சொல்லி அனுப்புச்சாறு.
அந்த பேய் ஒட்டுறவர போய் பார்த்தாரு அந்த பேய் வீட்ட வாங்குனவரு ,உடனே அந்த பேய் ஓட்டுறவாறு , நான் உங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்குறேன்னு சொன்னாரு.
மறுநாள் அந்த பேய் வீட்டுக்கு வந்த பேய் ஓட்டுறவறு, பேய் ஒன்னும் இங்க இல்லை நம்புங்கனு சொன்னாரு ,.
தொடர்ந்து இங்க ஒன்னும் சமையல் வாசனை வரலையே , எனக்கு ஒன்னும் இசை சத்தம் கேக்கலையேன்னு தொடர்ந்து சொல்லிகிட்டே இருந்தாரு.
அந்த பேய் ஒட்டுறவாறு தொடர்ந்து பேய் இல்லைங்கிறத எடுத்து சொல்லிகிட்டே இருக்க கொஞ்சம் கொஞ்சமா அந்த வீட்டுக்காரருக்கு பயம் போய்டுச்சு.
இத பக்கத்து வீட்டுல இருந்து வந்த அவுங்க மனைவி பார்த்தாங்க ,அவுங்களும் அங்க பேய் இல்லைனு நம்ப ஆரம்பிச்சாங்க.
உடனே அந்த தெருவுல இருந்த எல்லாரும் ஒவ்வொருத்தரா தைரியம் அடைஞ்சு அந்த வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சாங்க , கொஞ்ச நேரத்துல அந்த வீடே குதூகலமா ஆகிடுச்சு.
அப்பத்தான் அந்த பேய் ஓட்டுறவாறு சொன்னாரு இந்த உலகத்துல பேய் இல்ல பேய் பயம்தான் இருக்கு , எதாவது ஒரு விஷயத்தை பேய் செஞ்சிருக்குமோனு பயந்து அது நிஜமாவே யார் செஞ்சாங்கன்னு ஆராயாமலே விட்டுட்டு ,பேய் பேய்னு பயப்படுறது தவறு

பேய் இருக்கு இருக்குனு பயப்படறத விட ,பேய் இல்லை பேய் இல்லைனு தைரியத்தை வளர்த்துகோங்கனு சொல்லி எல்லாரையும் தைரிய சாலியா மாத்துனாரு

குழந்தைகளே :- யாராவது உங்களுக்கு பேய் இருக்குனு சொன்னா ,பேய் என்னைக்கு என் கண் முன்னாடி வருதோ அப்பத்தான் நான் நம்புவேன்னு சொல்லுக்கு ,

பேய் எப்பவும் குழந்தைகள் கிட்ட வராது ஏன்னா குழந்தைகள் ரொம்ப தைரிய சாலிகள்

பேய் திரைப்படம் பார்த்து பயப்படும் குழந்தைகளுக்கு :- குழந்தைகளே பேய் இருக்கு அது வந்து ராத்திரி எல்லாரையும் கொல்லும்னு படம் எடுத்துதான் அந்த திரைப்படம் வியாபாரம் ஆகும் ,அதனால அந்த மாதிரி திரைப்படங்கள் கற்பனையா எடுக்குறாங்க , அப்படி அடுத்தவங்களை பயமுறுத்த படம் எடுக்குறவங்க நல்லா சம்பாதிச்சு நல்லா இருக்காங்க , நீங்க அத பொழுதுபோக்கு திரைப்படமா பார்க்கணுமே தவிர , அது உணமையான பேய நேர்ல போய் படம் பிடிச்சி திரைப்படமா எடுத்திருக்காங்கனு நம்ப கூடாது ,

அப்படி உண்மையாவே பேய் இருந்துச்சுன்னா கடவுளும் கண்டிப்பா இருப்பாரு ,தினமும் நம்மள பாதுகாக்கவே இருக்குற கடவுள் உண்மையாவுமே இருந்தாருன்னா இந்த பேய்களை எல்லாம் ஒரே எத்து எத்தி அங்குட்டு போ பேயெனு தொரத்தி விட்டுடுவாரு.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்