ஒரு நகரத்துல ஒரு சுட்டி பெண் தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்தா.
அவளோட பேரு தாரா , தாரா எப்பவும் அவுங்க அம்மாகூட வெளிய போகும்போது நிறய பொருட்களை வாங்குவா.
அவ வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளுக்கு உபயோகமாவே இருக்காது ,
எப்ப வெளிய போனாலும் எதையாவது பார்த்து உடனே தனக்கு வேனும்னு கேட்டு அடம்பிடிப்பா.
அவளோட அழுகை தங்க முடியாம அவுங்க அம்மா அத அவளுக்கு வாங்கி கொடுத்துடுவாங்க
ஒருநாள் தாரா அவுங்க அம்மா கூட கடை தெருவுக்கு போனா ,அங்க ஒரு விளக்கு கடை இருந்துச்சு ,அத பார்த்த உடனே எனக்கு இந்த விளக்க வாங்கி தாங்கனு கேட்டா தாரா.
விளக்க வச்சு நீ என்ன பண்ணப்போற , நான் வேற ஏதாவது வாங்கி தாரேன்னு சொல்லி அங்க இருந்து கூட்டிட்டு போய்ட்டாங்க.
அடுத்ததா ஒரு தொப்பி கடைய பாத்தா தாரா ,உடனே எனக்கு அந்த அழகான தொப்பி வேணும்னு சொல்லி அடம்பிடிச்சா,அதுக்கும் அவுங்க அம்மா முடியாதுனு சொல்லி அடுத்த கடைக்கு கூட்டிட்டு போனாங்க.
அடுத்ததா ஒரு நகை கடை இருந்துச்சு ,அத பார்த்த தாரா அம்மா எனக்கு ஒரு நல்ல கம்மல் வாங்கி தாங்கனு கேட்டா.
அதுக்கு அவுங்க அம்மா உன்கிட்ட தான் நல்ல அழகான தங்க கம்மல் நிறய இருக்கே இப்ப எதுக்கு புது கம்மல் கேக்குறன்னு சொல்லி அவளை அங்க இருந்து கூட்டிகிட்டு போய்ட்டாங்க.
அதுக்கு அடுத்ததா ஜாடி கடை இருந்துச்சு ,அதுல ஒரு பிங்க் கலர் ஜாடி தாராவுக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு உடனே அது வேணும்னு கேட்டா.
அதுக்கு அவுங்க அம்மா சொன்னாங்க தாரா நீ பாக்குற பொருளை எல்லாம் வாங்கணும்னு நினைக்க கூடாது ,எது உனக்கு உபயோகமா இருக்கோ அது உனக்கு வேணும்னு கேட்டாகூட பரவா இல்லை ,
ஆனா நீ கேக்குறது எல்லாமே உனக்கு உபயோகம் இல்லாத பொருளா இருக்கு ,அல்லது ஏற்கனவே உன்கிட்ட இருக்குற பொருளா இருக்குனு சொல்லி திட்டுனாங்க
ஆனா அந்த பிங்க் கலர் ஜாடி அவளுக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு ,அதனால அழுக ஆரம்பிச்சா தாரா
அப்பத்தான் அவுங்க அம்மா கவனிச்சாங்க தாராவோட செருப்பு பிஞ்சி இருந்த.
பார்த்தியா உனக்கு இப்ப தேவை நல்ல செருப்புதான் ,அத வாங்கலாம் வா சொல்லி செருப்பு கடைக்கு கூட்டிட்டு போனாங்க.
அந்த கடைல நீண்ட நாள் உழைக்கிற தோல் செருப்பு நிறய இருந்துச்சு ,ஆனா அந்த செருப்பு எதுவுமே தாராவுக்கு பிடிக்கல.
எனக்கு பிடிக்காத பொருள எதுக்கு எனக்கு வாங்கி தர பாக்குறீங்க ,அந்த காசுக்கு எனக்கு பிடிச்ச பிங்க் கலர் ஜாடிய வாங்கி தரலாமேன்னு சொல்லி ஆடம் பிடிச்சா தாரா.
வேற வழி இல்லாம தாராவோட அம்மா அந்த ஜாடி கடைக்கு கூட்டிட்டு போயி அந்த பிங்க் கலர் ஜாடிய வாங்கி கொடுத்தாங்க.
ரொம்ப சந்தோசமான தாரா அந்த ஜாடியை வாங்கிகிட்டு வீட்டு நடக்க ஆரம்பிச்சா.
அப்பத்தான் அவளோட பிஞ்சி போன செருப்பு முழுசா பிஞ்சி போச்சு ,அதனால் அவளால நடக்க முடியல.
செருப்பு இல்லம நடந்ததால அவளுக்கு கால் ரொம்ப வலிச்சுச்சு, இருந்தாலும் ஜாடி வாங்குன சந்தோசதுல வீட்டுக்கு வந்தா தாரா.
வீட்டுக்கு வந்ததும் ஒரு ரோஜா செடியை எடுத்து அந்த ஜாடியில் வைக்க ஏற்கனவே இருந்த அந்த ஜாடி குள்ள இருந்த கெட்ட தண்ணிய வெளியில கொட்டுனா.
அப்பத்தான் அவளுக்கு புரிஞ்சது அந்த பிங்க் கலர் ஜாடியோட கலர் இல்ல ,உள்ள இருந்த தண்ணியோட கலர்னு.
தண்ணிய வெளியில ஊத்துனது பிறகு பார்த்தா அந்த ஜாடி சாதாரண கண்ணாடி ஜாடியா இருந்துச்சு,உடனே தாராவுக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு.
தாரா அழுகுறத பார்த்த அவுங்க அம்மா சொன்னாங்க, கவலை படாத தாரா இது உனக்கு ஒரு பாடம்
ஆசைக்காக நீ வாங்குன ஒரு பொருள் உனக்கு எப்பவும் உபயோகமா இருக்கும்னு சொல்ல முடியாது , உனக்கு எந்த பொருள் உபயோகமா இருக்குமோ அந்த பொருள் நல்லதா இருக்கணும்னு தான் உன்னோட ஆசை இருக்கனும்
அந்த மன நிலைல இருந்திருந்தா உனக்கு உபயோகமான செருப்புல உனக்கு பிடிச்ச நல்ல செருப்ப தேர்ந்தெடுத்து இருப்ப ,ஆனா நீ ஆச பட்ட ஒரே காரணத்துக்காக அந்த பிங்க் கலர் ஜாடிய சோதிச்சு கூட பார்க்காம வாங்கிட்ட ,அதோட விளைவை நீயே இப்ப தெரிஞ்சிகிட்டனு சொன்னாங்க.
அப்பதான் தாராவுக்கு தான் செஞ்ச தவறு புரிஞ்சது இனிமே இதுமாதிரி நடனத்துக்கு மாட்டேன்னு சொன்னா ,தொடர்ந்து தேவையில்லாத பொருளை அம்மா கிட்ட கேட்டு ஆடம் பிடிக்காம அந்த காசை எல்லாம் மிச்சம் செஞ்சு உண்டியல்ல போட்டு சேத்து வைக்க ஆரம்பிச்சா தாரா.