முயற்சியை நிறுத்தாதே - இரண்டு தவளைகள்அது ஒரு கோடை காலம் ,அதனால காட்டுல இருக்குற தண்ணி குட்டைகள் எல்லாம் வறண்டு போய்டுச்சு.
அதனால அங்க இருக்குற தவளைகள் எல்லாம் நல்ல தண்ணி இருக்குற குளத்தை தேடி ரொம்ப தூரம் நடந்து போச்சுங்க.
அப்படி போகுறப்ப ரெண்டு தவளைகள் மட்டும் ஒரு பெரிய குழிக்குள்ள விழுந்துடுச்சுங்க.
அந்த குழி ரொம்ப இருட்டாவும் ரொம்ப ஆழமாவும் இருந்துச்சு ,அதனால் ரெண்டு தவளைகளும் ரொம்ப பயந்து போச்சுங்க.
ரெண்டு தவளைகளும் வெளிய வர எம்பி எம்பி குதிச்சு பாத்துச்சுங்க, ஆனா அந்த குழி ரொம்பா ஆழமா இருந்ததால அதுங்கனால வெளிய வர முடியல.
வெளிய இருந்த தவளைகளோட நண்பர்கள் கூட அதுங்களுக்கு எந்த ஒரு உதவியும் வெய்ய முடியல.
அதுல ஒரு தவளை ரொம்ப தாழ்வு மனப்பான்மை கொண்டதா இருந்துச்சு, அதனால தன்னோட வாழ்வு இதோட முடிஞ்சுச்சுனு நினைச்சது, என்னால முடியாது இந்த குழி தான் எனக்கு மரண குழினு புலம்பி அங்கேயே செத்துப்போச்சு.
ஆனா இன்னொரு தவளை ரொம்ப தன்னம்பிக்கை கொண்டதா இருந்துச்சு ,அதனால தொடர்ந்து வெளியில வர குதிச்சி குதிச்சு முயற்சி செஞ்சிகிட்டே இருந்துச்சு.
ஒவ்வொரு தடவை குதிக்கிறப்பவும் தன்னோட உயரம் கூடுனத உணர்ந்த அந்த தவளையோட தன்னம்பிக்கை உயர்ந்துக்கிட்டே போச்சு ,ஒரு தடவ ரொம்ப முயற்சி பண்ணி அது குதிக்கிறப்ப அது அந்த குழியை விட்டே வெளிய வந்து விழுந்துச்சு

தன்னம்பிக்கை உடையவங்களுக்கு ஊக்கமும் பலமும் வந்து சேரும்னு இந்த கதை மூலமா நாம புரிஞ்சிக்கிடலாம்

எந்த ஒரு சூழ்நிலையிலயும் தாழ்வு மனப்பான்மைய மட்டும் நாம வளர விடவே கூடாது ,அதுக்கு சிறந்த மருந்து எப்பவும் தன்னம்பிக்கயோட இருக்குறது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்