காக்கையின் பகுத்தறிவு

ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு காக்கை, சற்று தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவனோ வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவனுடைய எச்சில் இலைக்கு காத்துக் கிடக்கிறது காக்கை

அவன் கையைக் கூட அசைக்கவில்லை.

காக்கை பொறுமை இழந்து, “ஏ, மனிதனே! நீ உண்ணும் உணவில் ஒரு பிடி அள்ளி வீசக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டது.

“ஏ, மடக் காகமே! உனக்குமா பசி? விடியற்காலையில் எழுந்திருக்கும் சுறுசுறுப்பை உன்னிடமிருந்து தானே நான் கற்றுக் கொண்டேன். உன் பசியை தீர்த்துக் கொள்ள உனக்கு வழி தெரியவில்லையா?” என்று கேட்டான் அவன்.

“நீ தான் அதற்கான ஒரு வழியைக் கூறக் கூடாதா?” என்று கேட்டது காகம்.

“இதற்குத் தான் பகுத்தறிவு வேண்டும் என்பது” என்றான். அவன் அருகில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடமட என்று குடிக்கத் தொடங்கினான் அவன்.

சமயம் பார்த்திருந்த காகம், அவனுடைய இலையிலிருந்து உணவைத் தூக்கிக் கொண்டு வேகமாகப் பறந்து போயிற்று

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்