நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு



காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது.

"என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு.

"உன் வலிமை எப்படிப்பட்டது? பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிறாண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் பெண் தன் கணவனுடன் சண்டையிடுவதைப் போலத்தான் இருக்கிறது. சரி, வா, நாம் இருவரும் சண்டை போட்டுப் பார்ப்போம்" என்றது உடனே இது 'ங்ஙொய்' என்று ரீங்காரம் செய்து கொண்டு சிங்கத்தின் மீது பறந்து, அதன் நாசியிலும், தாடையிலும் கடிக்கத் தொடங்கியது.

சிங்கம் கொசுவை விரட்ட, தன் நகங்களால் முகத்தைப் பிறாண்டியும், தட்டியும் தோலைக் கிழித்துக் கொண்டதில், இரத்தம் வழிந்ததோடு, களைத்தும் போய் விட்டது.

வெற்றி முழக்கத்தோடு கொசு பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த கொசு ஒரு சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது. சிலந்தி கொசுவின் இரத்தத்தை உறிஞ்சியது.

“வலிமை மிகுந்த சிங்கத்தையே வெற்றி கொண்டு, இப்போது ஒர் சிறிய சிலந்தி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறதே” என்று கொசு வருந்தியது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்